தமிழ்நாடு

நல்லகண்ணு பிறந்தநாள்: கமல்ஹாசன் - அண்ணாமலை வாழ்த்து

Published On 2024-12-26 11:19 IST   |   Update On 2024-12-26 11:19:00 IST
  • அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.
  • சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஐயா நல்லக்கண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணிகள் தொடர வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நூறாண்டு காணும் தொண்டு.

எல்லோரும் சமமென்னும் காலம் வரவேண்டும்; நல்லோர் பெரியர் என்னும் காலம் வரவேண்டும் என்பது பாரதியின் கனவு. அதன் நனவான வடிவமே மாபெரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் வாழ்வு.

சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்து, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.

இப்படி ஒருவர் இருக்க இயலுமா என்று வியக்கும் வண்ணம் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருந்தகை தோழர் நல்லகண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார்.

அவருக்கு என் வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இன்றைய தினம், நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஐயா நல்லகண்ணுக்கு, இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஐயா நல்லக்கண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News