தமிழ்நாடு

போகிற போக்கில் மிதித்து தள்ளிவிடுவேன்: பாண்டியராஜனை மிரட்டிய கே.டி.ராஜேந்திர பாலாஜி

Published On 2025-03-07 14:03 IST   |   Update On 2025-03-07 15:49:00 IST
  • பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
  • நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.

சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:

* கட்சியில் மரியாதை வேண்டும் என கேட்பவர்கள் கட்சிக்கு செய்தது என்ன?

* தடை இருந்தால வெட்டி எறிந்து விடவும் தயங்க மாட்டேன்.

* பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.

* போகிற போக்கில் மிதித்து தள்ளி விடுவேன்.

* எனக்குள் ஓடுவது அ.தி.மு.க. ரத்தம். உன் உடலில் ஓடுவது என்ன ரத்தம்?

* வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன்.

* நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.

* நான் இருக்கும்போது பாண்டியராஜனுக்கு மேடையில் சால்வை போட்டால் நான் வேடிக்கை பார்ப்பதா?

* தன்னை குறுநில மன்னன் என விருதுநகரில் வந்த கூற முடியுமா? என்று கூறினார்.

Tags:    

Similar News