தமிழ்நாடு

நெல் விளைச்சல் வீழ்ச்சி: விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2025-03-11 11:54 IST   |   Update On 2025-03-11 11:54:00 IST
  • உழவர்களுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
  • உரிய இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசே தனி பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வழக்கமாக கிடைக்க வேண்டிய மகசூலை விட 60 விழுக்காடு வரை குறைவான மகசூல் மட்டுமே கிடைத்திருக்கும் நிலையில் உழவர்களின் துயரைத் துடைக்க தமிழக அரசு இப்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

பயிர்க்காப்பீடு செய்வதன் நோக்கமே இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும் போது, அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், உழவர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என்பது தான். ஆனால், நடைமுறைக்கு ஒத்துவராத விதிமுறைகளை வகுத்துள்ள காப்பீட்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்க மறுக்கின்றன.

கடந்த காலங்களைப் போல் இல்லாமல் நெற்பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து உழவர்களுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசே தனி பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News