தமிழ்நாடு

அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு

Published On 2025-01-01 07:50 GMT   |   Update On 2025-01-01 07:50 GMT
  • தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் உள்ளனர்.
  • இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிச. 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. டிச. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் உள்ளனர்.

அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைத்தது.

2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.

இந்நிலையில் ஜன.2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து நாளை மாணவர்கள் பள்ளிக்கு திரும்ப உள்ளனர்.

Tags:    

Similar News