தமிழ்நாடு
கோவை வரும் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்ட பெரியாரிய, கம்யூனிஸ்ட் அமைப்புகள் முடிவு
- உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவைக்கு வருகை புரிகிறார்.
- அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சையாக பேசியதற்காக கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளனர்.
பிப்ரவரி 25 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவைக்கு வருகை புரிகிறார். 26 ஆம் தேதி பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், கோவைக்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கருப்புக் கொடி காட்ட பெரியாரிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முடிவெடுத்துள்ளனர்.
காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு, அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியது உள்ளிட்டவற்றிற்காக கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளனர்.