தமிழ்நாடு

யார் அந்த SIR என்ற கேள்வியை எதிர்கொள்ள அவ்வளவு பயமா ஸ்டாலின் அவர்களே? அ.தி.மு.க.

Published On 2025-01-06 11:21 IST   |   Update On 2025-01-06 11:21:00 IST
  • அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக கோஷமிட்டனர்.
  • ஆளுநர் ஆர்.என். ரவி மூன்றே நிமிடங்களில் புறப்பட்டு சென்றார்.

தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என். ரவியை அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சூழ்ந்து கொண்டு அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக கோஷமிட்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர். இதையடுத்து தேசிய கீதத்திற்கு அவமானம் ஏற்பட்டதாகக்கூறி ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து மூன்றே நிமிடங்களில் புறப்பட்டு சென்றார்.

 


சட்டசபையில் ஆளுநரை உரையாற்ற விடாமல் முழக்கமிட்ட அ.தி.மு.க.வினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பதாகைகளை ஏந்தியபடி சட்டசபையை விட்டு அ.தி.மு.க.வினர் வெளியேறினர். இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுக்கான காட்சி இணைப்பு ஊடகங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அ.தி.மு.க. கட்சியின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கான காட்சி இணைப்பு ஊடகங்களுக்கு மறுக்கப்பட்டது ஏன்? பேரவை நிகழ்வுகள் மக்களுக்கு தெரியவே கூடாது என்று மொத்தமாக துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு!"

"யார் அந்த SIR என்ற கேள்வியை எதிர்கொள்ள அவ்வளவு பயமா முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடப்பது "அவசர நிலை" ஆட்சி என்று தோழர் சொன்னது_உண்மைதான்!," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News