தமிழக சட்டப்பேரவை கூடியது - 3 நிமிடங்களில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என். ரவி
- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுகிறார்.
- சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை தமிழில் வாசிக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதே நடைமுறை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான கூட்டம் துவங்கியது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற இருந்தார்.
இதற்காக தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பேண்டு வாத்தியங்கள் மற்றும் காவல் துறை அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதன் பிறகு சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதன்பிறகு, ஆளுநர் ஆர்.என். ரவி சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றே நிமிடங்களில் அவர் அவையில் இருந்து வெளியேறியுள்ளார்.