சட்டசபையில் ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர்
- வறுமையை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள் உரிமையை பாதுகாக்க அரசு முழு முனைப்பு கொண்டுள்ளது.
சட்டசபையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்ட நிலையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவர் உரையில் கூறியதாவது:
* பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 60 சதவீதம்.
* ஊரக பகுதிகளில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை.
* வறுமையை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* மிகவும் பின்தங்கியுள்ள மக்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* பால் கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
* மீனவர்கள் உரிமையை பாதுகாக்க அரசு முழு முனைப்பு கொண்டுள்ளது.
* இலங்கையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து வலியுறுத்தல்.
* தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.
* கிராமப்புற சாலை வசதி திட்டத்தின் மூலம் ரூ.4,000 கோடியில் 9,653 கி.மீ. சாலைகள் சீரமைப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.