தமிழ்நாடு
தேர்வுக்கு தயாராக பிரதமர் எழுதிய புத்தகத்தை மாணவர்கள் படிக்கவேண்டும்: ஆர்.என்.ரவி அறிவுரை
- கல்வி மட்டுமே தகுதியையும், தலைமை பண்பையும் கொடுக்கும்.
- மாணவர்கள் வாழ்வில் நேர மேலாண்மையை நெறிப்படுத்த வேண்டும் என்றார்.
சென்னை:
தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, விளிம்பு நிலையில் உள்ள சுமார் 5,000 மாணவர்களை தனியார் கேளிக்கை பூங்காவிற்கு இன்பச் சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்தது.
இந்நிலையில், மாணவர்களின் இன்பச்சுற்றுலாவை கவர்னர் மாளிகையில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது மாணவர்களிடம் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, கல்வி மட்டுமே பிறருக்கு நன்மை செய்யும் பலம், வலிமை மற்றும் தலைமை பண்பை கொடுக்கும். மாணவர்கள் கடுமையாக முயன்று கல்வி பயில வேண்டும். மாணவர்கள் வாழ்வில் நேர மேலாண்மையை நெறிப்படுத்த வேண்டும். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக பிரதமர் மோடி எழுதிய எக்ஸாம் வாரியர்ஸ் (Exam Warriors) புத்தகத்தை படிக்கவேண்டும் என தெரிவித்தார்.