தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா புகைப்பட கண்காட்சியை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி

Published On 2025-01-01 05:13 GMT   |   Update On 2025-01-01 05:13 GMT
  • திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
  • கண்காட்சியை ஒரு வார காலம் இலவசமாக பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி விழா நடந்த மைதானத்தில் திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு மற்றும் திருக்குறள் பற்றிய கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சியில் திருவள்ளுவர் சிலையின் மர சிற்பத்திலான மாதிரி தோற்றம், திருக்குறள் ஓலைச் சுவடிகள், திருக்குறள் எழுதப்பட்ட பட்டு சேலை, புத்தகங்கள், மின்நூல்கள், திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு பற்றிய புகைப்படங்கள், திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை ஒரு வார காலம் இலவசமாக பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.

Tags:    

Similar News