தமிழ்நாடு

அஞ்சலை அம்மாள் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

Published On 2025-02-20 14:18 IST   |   Update On 2025-02-20 14:18:00 IST
  • சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
  • முதுநகரில் உள்ள அஞ்சலை அம்மாள் சிலைக்கு த.வெ.க. சார்பில் மாவட்ட செயலாளர் மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி கடலூர் மாவட்டம் முதுநகரில் உள்ள அஞ்சலை அம்மாள் சிலைக்கு பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News