தமிழ்நாடு
சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட த.வெ.க. அலுவலகம் இடிப்பு
- ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணி ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.
- திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞரணி கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.
திருவள்ளூரில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞரணி கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.
அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணி ஒரு வாரமாகவே நடந்து வருகிறது. இந்த நிலையில், த.வெ.க. அலுவலகத்தையும் நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி மூலம் இடித்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.