தமிழ்நாடு
மெரினாவில் காதலர் தின பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- காதலர் தினம் நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
- சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நாளை காதலர்கள் பொது இடங்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
சென்னை:
காதலர் தினம் நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நாளை காதலர்கள் பொது இடங்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். மெரினா கடற்கரையில் கூடும் காதல் ஜோடிகளுக்கு காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திருமணம் செய்து வைக்கும் சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாளை மெரினா கடற்கரையில் போலீசார் ரோந்து சென்று கண்காணிக்க உள்ளனர்.
இதே போன்று பொழுது போக்கு பூங்காக்களிலும் காதல் ஜோடிகள் மீதான அத்து மீறல் சம்பவங்களை தடுப்பதற்காக அந்தந்த பகுதி போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் மேற்கொள்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.