தமிழ்நாடு

'மைக் புலிகேசி'- சீமானை கலாய்த்த டிஐஜி வருண்குமார்

Published On 2025-02-19 12:35 IST   |   Update On 2025-02-19 12:50:00 IST
  • சீமானுக்கு எதிரான வழக்கை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.
  • கேவலமான எண்ணம் படைத்த மனிதராய் இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜரானார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சீமானுக்கு எதிரான வழக்கை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.

நான் என் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தரம் தாழ்ந்த தகவல்களை சீமான் தரப்பு பரப்பி வருகிறது.

கேவலமான எண்ணம் படைத்த மனிதராய் இருக்கிறார். தரம் தாழ்ந்த தகவல்களை பரப்புவதை தவிர மைக் புலிகேசியால் வேறு என்ன செய்துவிட முடியும்? என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News