யார் அந்த சார்? பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க.வினர்
- யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
- மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு யார் அந்த சார்? என்ற வாசகத்துடன் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டின் சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது.
சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யார் அந்த சார்? என அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு யார் அந்த சார்? என்ற வாசகத்துடன் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்தனர்.
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யார் அந்த சார்? என்ற பேட்ஜூடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.