செய்திகள்

5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட மோட்டோ இ4 பிளஸ்: விரைவில் வெளியீடு

Published On 2017-06-24 18:53 IST   |   Update On 2017-06-24 18:53:00 IST
சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்ட மோட்டோ இ4 ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கு முன் அந்நிறுவனம் டீசர்களை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:  

இந்தியாவில் மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போனினை தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட லெனோவோவின் மோட்டோரோலா தயாராகி வருகிறது. அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் டீசரை மோட்டோரோலா வெளியிட்டுள்ளது. புதிய டீசரில் பேட்டரி தீர்ந்து போவதை குறிக்கும் ஐகான் மற்றும் ‘What’s coming next?’ அடுத்து என்ன என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. 

புதிய மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் 5000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்றும் இத்துடன் மோட்டோ இ4 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் மோட்டோ இ4 மற்றும் இ4 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.  



மோட்டோ இ4 சிறப்பம்சங்கள்:

* 5.0 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 2800 எம்ஏஎச் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 427 சிப்செட்
* 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5000 எம்ஏஎச் பேட்டரி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

சர்வதேச சந்தையில் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் 129.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,384 மற்றும் மோட்டோ இ4 பிளஸ் 179.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.11,609 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News