செய்திகள்

32 ஜிபி மெமரி கொண்ட கூல்பேட் நோட் 5 லைட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2017-11-24 10:50 IST   |   Update On 2017-11-24 10:50:00 IST
கூல்பேட் நிறுவனத்தின் நோட் 5 லைட் ஸ்மார்ட்போனின் 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் இந்தியவில் அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் நோட் 5 லைட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் வெளியிட்டது. 16 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வெளியிடப்பட்ட நோட் 5 லைட் ஸ்மார்ட்போன் தற்சமயம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வெளியிடப்பட்டுள்ளது.

மெமரி மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 5.0 இன்ச் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் MT6735 பிராசஸர், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

ஃபுல் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ள கூல்பேட் நோட் 5 லைட் ஸ்மார்ட்போன் 0.1 நௌடிகளில் அன்லாக் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கூல்பேட் நோட் 5 லைட் சிறப்பம்சங்கள்:

- 5.0-இன்ச் 1280X720 பிக்சல் எச்டி IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6735CP 64-பிட் பிராசஸர்
- மாலி-T720 GPU
- 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி / 32ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ மற்றும் கூல் UI 8.0
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2500 எம்ஏஎச் பேட்டரி

ராயல் கோல்டு நிறத்தில் கிடைக்கும் கூல்பேட் நோட் 5 லைட் ஸ்மார்ட்போன் 32 ஜிபி விலை ரூ.8,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்னவே வெளியான கூல்பேட் நோட் 5 லைட் 16 ஜிபி மெமரி மாடலின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் 16 ஜிபி மெமரி கொண்ட கூல்பேட் நோட் 5 லைட் ஸ்மார்ட்போன் ரூ.7,499க்கு கிடைக்கிறது.

Similar News