உலகம்
பிரான்சில் சோகம்- அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
- தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என தகவல்
- தீக்காயம் அடைந்த 14 பேரில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடம்.
பிரான்ஸ் நாட்டின் லியோன் நகர புறநகர் பகுதியில் உள்ள வோல்க்ஸ்-என்-வெலின் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 170 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் அதில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கள் எடுக்கப்பட்டன. இந்த தீ விபத்தில் ஐந்து குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்து விட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் 14 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.