செய்திகள்

கோயில் பூசாரி படுகொலை எதிரொலி: வங்காளதேசத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2016-06-07 15:20 IST   |   Update On 2016-06-07 15:20:00 IST
வங்காளதேசத்தில் இன்று காலை கோயில் பூசாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், 3 தீவிரவாதிகளை அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
டாக்கா:

வங்காளதேசத்தில் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள்மீது சமீபகாலமாக கொலைவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதில் சமீபத்திய சம்பவமாக இன்று காலை இந்து கோயில் பூசாரி ஒருவர் கழுத்தை அறுத்து துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று வங்காளதேச காவல்துறையினர் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு நடவடிக்கையில் 3 மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்கா அருகில் கால்ஷாய் பகுதியில் மறைந்திருந்த உளவுத்துறை போலீசார் 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இவர்கள் இருவரும் மசூதி மீது குண்டு வீசியது மற்றும் ஒரு கல்லூரி பேராசிரியரை கொன்றது உட்பட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைவர்கள்.

ராஜ்ஷாஹி நகரத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் மூன்றாவது தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரும் 'ஜஹாதுல் முஜாஹிதீன் பங்காளாதேஷ்' இயகத்தை சேர்ந்தவர்கள்.

இன்று காலை நடந்த கோயில் பூசாரி படுகொலைக்கும் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், இதுவரை முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் மற்றும் மத சிறுபான்மையினர் தொடர்ச்சியாக கொல்லப்பட்ட போது கடும் நடவடிக்கை எடுக்காத அந்நாட்டு அரசு இந்த முறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News