செய்திகள்

ஒபாமா நிர்வாகத்தை குறை கூறும் அண்ணன் - எதிர்க்கட்சிக்கு ஓட்டு போடபோவதாக அறிவிப்பு

Published On 2016-07-26 10:17 IST   |   Update On 2016-07-26 10:17:00 IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா கட்சி வேட்பாளர் ஹிலாரிக்கு ஓட்டு போட மாட்டேன். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு ஓட்டு போடப் போகிறேன் என மாலிக் ஒபாமா கூறுகிறார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா (வயது 57). இவர் அதிபர் ஒபாமா தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர்.

கென்யா நாட்டை சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள மேரி லேன்ட் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் ஓட்டுரிமை உள்ளது.

ஆனால், வருகிற அதிபர் தேர்தலில் ஒபாமா கட்சி வேட்பாளர் ஹிலாரிக்கு ஓட்டு போட மாட்டேன். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு ஓட்டு போடப் போகிறேன் என மாலிக் ஒபாமா கூறுகிறார்.

இதுபற்றி விளக்கம் சொல்லும் அவர், எனது தம்பி பராக் ஒபாமா நிர்வாகத்தில் நான் அதிருப்தி அடைந்துள்ளேன். எனவேதான் குடியரசு கட்சிக்கு ஓட்டு போட போகிறேன். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தனது இதயத்தில் இருந்து பேசுகிறார். எனக்கு அவரை பிடித்துள்ளது. அவரை நான் சந்திக்க விரும்புகிறேன் என்று அவர் கூறி இருக்கிறார்.

Similar News