செய்திகள்

5 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானுக்கான தூதரை நியமித்தது இங்கிலாந்து

Published On 2016-09-06 01:25 IST   |   Update On 2016-09-06 01:25:00 IST
2011 தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ஈரான் நாட்டிற்கான தூதரை இங்கிலாந்து தற்போது நியமித்துள்ளது.
லண்டன்:

ஈரான் நாட்டிற்காக தூதரை கடந்த 5 ஆண்டுகளில் முதன் முறையாக இங்கிலாந்து நியமனம் செய்துள்ளது. கத்தார் மற்றும் ஏமன் நாடுகளுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதரரான நிகோலஸ் ஹோப்டன் ஈரானுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெஹ்ரானில் இங்கிலாந்து தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டு ஓராண்டிற்கு பிறகு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஈரான் இடையேயான உறவில் இது மிகவும் முக்கியமான தருணம் என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் போரிஸ் ஜான்ஸ்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தாக்கப்பட்டதை தொடர்ந்து மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News