செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: பள்ளி கட்டிடம் இடிந்து 57 மாணவர்கள் காயம்

Published On 2016-09-06 11:08 IST   |   Update On 2016-09-06 11:08:00 IST
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 57 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 57 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் சுமார் 37 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.7 அலகுகளாக பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் கைபர் பக்துங்வா மாகாணத்திற்குட்பட்ட பட்டாகிராம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 57 மாணவர்கள் காயம் அடைந்ததாக அம்மாவட்ட துணை கமிஷனர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

Similar News