செய்திகள்
மலேசியாவில் வசீகரிக்கும் அழகான 330 ஆமைகள் பறிமுதல்
மலேசியா நாட்டில் வசீகரிக்கும் தன்மை வாய்ந்த 330 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும்.
கோலாலம்பூர்:
மலேசியா சுங்கத் துறை அதிகாரிகள் கடத்தல் அபாயம் உள்ள ஆமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், மலேசியா நாட்டில் வசீகரிக்கும் தன்மை வாய்ந்த 330 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும்.
ஆப்பிரிக்கா கண்டத்தை ஒட்டியுள்ள மடாகஸ்கர் தீவில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்றபோது அந்நாட்டு சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் அனத்து உயிரோடு இருந்ததாக மலேசிய சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கதிர்வீச்சு பாய்ச்சப்பட்ட இந்த வகையிலான ஆமைகள் மிகவும் அழகாக காணப்படும். இதனால் இதனை கடத்தி பலரும் விற்பனை செய்து வருகின்றனர்.