செய்திகள்

வங்காளதேசம்: போர் குற்ற வழக்கில் இஸ்லாமிய தலைவருக்கு ஆயுள் தண்டனை

Published On 2017-05-15 15:58 IST   |   Update On 2017-05-15 15:58:00 IST
வங்காளதேசத்தில் போர் குற்ற நடவடிக்கை தொடர்பான வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவர் டெல்வர் ஹுசைன் சயீதிக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
டாக்கா:

வங்காளதேசத்தில் 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.



ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவரான டெல்வர் ஹுசைன் சயீதி(71) என்பவர் மீதும் வழக்கு கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

அவர் மீது இளம் விடுதலைப் போராட்ட வீரர்கள் இருவரை சித்ரவதை செய்து கொன்ற குற்றம். நூற்றுக்கும் அதிகமான இந்து மக்களை மதமாற்றம் செய்தது, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இளம்பெண்களை பாலியல் அடிமைகளாக ஒப்படைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதில் 5 குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் கடந்த 2013-ம் ஆண்டில் அவருக்கு விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து இவ்வழக்கின் வாதியான அரசு தரப்பு வழக்கறிஞரும் பிரதிவாதியான டெல்வர் ஹுசைன் சயீதியின் வழக்கறிஞர் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தி கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தியது.

இந்த தீர்ப்பை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்திருந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு வங்காளதேச சிறப்பு தீர்ப்பாயம் முன்னர் அளித்திருந்த ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

போர்குற்ற வழக்கு தொடர்பாக சிறப்பு தீர்ப்பாயம் முன்னர் அளித்திருந்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டின் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News