செய்திகள்
பாங்காக்கில் சிறை போன்று வடிவமைக்கப்பட்ட உணவு விடுதி: தங்குவோருக்கு கைதிகள் உடை
பாங்காக்கில் சிறை போன்ற அமைப்பில் ஒரு உணவு விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கவருவோருக்கு கைதிகளுக்கான சீருடை போன்ற ஆடைகள் வழங்கப்படுகின்றன.
பாங்காக்:
தாய்லாந்து தலைநகர் பாங்காக் ஒரு சுற்றுலாதலமாகும். இங்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
எனவே அவர்களை கவருவதற்காக சிறை போன்ற அமைப்பில் ஒரு உணவு விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அறைகள் அனைத்தும் சிறைச்சாலைகளில் இருப்பதை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளன.
இங்கு தங்கவருவோருக்கு கைதிகளுக்கான சீருடை போன்ற ஆடைகள் வழங்கப்படுகின்றன. விளக்குகள் மற்றும் கதவுகளும் சிறையை போன்றே வடிவமைத்துள்ளனர்.
1994-ம் ஆண்டில் வெளியான ‘தி ஷாசான்க் ரெடம்சன்’ என்ற ஆங்கில படம் வெளியானது. அதைப் பார்த்து இந்த உணவு விடுதியை வடிவமைத்ததாக அதன் உரிமையாளர் கூறினார். ஒரேயொரு முறை வரும் வாடிக்கையாளர்களை குறி வைத்து இந்த ஓட்டலை தொடங்கியதாகவும், ஆனால் ஒரு முறை வந்தவர்கள் மீண்டும் திருப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.