செய்திகள்
ஏமனில் சவுதி விமானப்படை தாக்குதலில் 29 பேர் பலி
ஏமன் நாட்டின் தென்பகுதியில் உள்ள சாடா மாகாணத்தில் சவுதி அரேபியா தலைமையிலான விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 29 பேர் உயிரிழந்தனர்.
சனா:
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த மூன்றாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள சாடா மாகாணத்தில் ஹவுத்தி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சஹர் மாவட்டத்தில் பிரபல வணிக பகுதியில் உள்ள ஓட்டலின் மீது சவுதி அரேபியா நாட்டின் தலைமையிலான விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 29 பேர் உயிரிழந்தனர்.
சவுதி அரேபியா நாட்டின் எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள சஹர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்டமானதாக ஏமன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.