செய்திகள்
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் டாக்டருக்கு மேலும் 125 ஆண்டு ஜெயில்
ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளிடம் ‘செக்ஸ்’ சில் ஈடுபட்ட குற்றத்துக்காக லார்ரி நாசருக்கு 125 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக் கிளப் மற்றும் மிச்சிகன் மாகாண பல்கலைக் கழக விளையாட்டு துறையில் டாக்டராக இருந்தவர் லார்ரி நாசர்.
இவர் பணியில் இருந்த போது இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளிடம் ‘செக்ஸ்’ லீலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருக்கு எதிராக இதுவரை 265-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் செய்துள்ளனர்.
எனவே கைது செய்யப்பட்ட அவர்மீது கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 60 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஜனவரி மாதம் அவருக்கு 175 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளிடம் ‘செக்ஸ்’ சில் ஈடுபட்ட குற்றத்துக்காக தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு மேலும் 40 முதல் 125 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்மூலம் அவருக்கு இதுவரை 300 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews