செய்திகள்

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன்-மகள் போட்டி

Published On 2018-06-05 11:37 IST   |   Update On 2018-06-05 11:37:00 IST
பாகிஸ்தானில் ஜூலை மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் மகன், மகள் போட்டியிடுகின்றனர்.#PakistanParlimentElection
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ, மகள் ஆசியா பூட்டோ ஆகியோர் போட்டியிடுகின்றனர். பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார். அவர் லர்கானா என்.ஏ-200 மற்றும் லியாரி என்.ஏ-246 ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

பெனாசிரின் மகள் ஆசியா பி.எஸ்.-10 ரத்தோ- டாரோ தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. மனுக்கள் பரிசீலனை 14-ந்தேதி நடைபெறுகிறது. மனு வாபஸ் 22-ந்தேதி நடக்கிறது. அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. #PakistanParlimentElection
Tags:    

Similar News