செய்திகள்
கோப்புப்படம்

டோக்கியோ நகரில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா

Published On 2021-08-08 16:23 IST   |   Update On 2021-08-08 16:23:00 IST
ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவடைந்த நிலையில், டோக்கியோ நகரில் இதுவரை இல்லாத அளவிற்கு ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந்தேதியில் இருந்து இன்று வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் டோக்கியோவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக தினசரி பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. உச்சக்கட்டமாக கடந்த வியாழக்கிழமை 5,042 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று 4,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இதற்கு முன் இதுபோன்று அதிக அளவில் பாதிவானது கிடையாதாம்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கியதில் இருந்தே டோக்கியோ நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News