உலகம்
உக்ரைன் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி

ரஷிய ஆயுத கழிவுகளை அகற்ற பல ஆண்டுகள் ஆகலாம்- உக்ரைன் மந்திரி செல்கிறார்

Published On 2022-03-20 09:22 IST   |   Update On 2022-03-20 09:22:00 IST
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு முடிந்தாலும் உக்ரைன் மண்ணில் இருக்கும் ரஷிய படைகளின் ஆயுத கழிவுகளை அகற்ற பல ஆண்டுகள் ஆகலாம் என உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி கூறினார்.
கீவ்:

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு முடிந்தாலும் உக்ரைன் மண்ணில் இருக்கும் ரஷிய படைகளின் ஆயுத கழிவுகளை அகற்ற பல ஆண்டுகள் ஆகலாம் எனவும், இதற்கு மேற்கத்திய நாடுகளின் உதவி நிச்சயம் தேவைப்படும் எனவும் உக்ரைன் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “உக்ரைன் மீது ஏராளமான குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் வீசப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பகுதி வெடிக்கவில்லை. அவை இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. அவற்றை அகற்ற மாதங்கள் அல்ல, வருடங்கள் ஆகும்” என்றார்.

மேலும் அவர், ரஷியாவின் ஆயுத கழிவுகள் தவிர, ரஷிய படைகளின் ஆக்கிரமிப்பை தடுக்க விமான நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உக்ரைன் வீரர்கள் கண்ணிவெடிகளை புதைத்துள்ளனர். அவற்றையும் எங்களால் உடனடியாக அகற்ற முடியாது. எனவே இவற்றை அகற்ற அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவி தேவை” எனவும் கூறினார்.

Similar News