உலகம்

VIDEO: ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் பறந்த சிறுவன்

Published On 2025-03-21 09:00 IST   |   Update On 2025-03-21 09:00:00 IST
  • விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பணியாற்றுவதற்காக கடுமையான பயிற்சிகள் மேற்கொள்கிறார்கள்.
  • பூஜ்ய புவியீர்ப்பில் பறந்த இளவயது நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றான்.

பூமி தன்னை நோக்கி பிற பொருட்களை ஈர்க்கும் விசையை புவிஈர்ப்பு விசை என்கிறோம். பூமியை தாண்டி விண்வெளிக்கு சென்றால் அங்கு புவியீர்ப்பு விசை என்பது கிடையாது. இதனால்தான் விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பணியாற்றுவதற்காக கடுமையான பயிற்சிகள் மேற்கொள்கிறார்கள். இதற்காக பூஜ்ய புவியீர்ப்பு அறையில் அவர்கள் அடைக்கப்பட்டு சிறப்பு பயிற்சிகள் பெறுவார்கள்.

இந்தநிலையில் சிறுவன் ஒருவனுக்கும் அதுபோல பறக்கும் ஆசை ஏற்பட்டது. இதனால் 8 வயதில் புவியீர்ப்பு விசை இல்லாத அறையில் பறந்து சாதனை படைத்து உள்ளான். அமெரிக்காவை சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் ஜாக் மார்ட்டீன். அவன் பூஜ்ய புவியீர்ப்பு அறையில் விண்வெளி வீரர்களுடன் இணைந்து பறந்தான். இதன் மூலம் பூஜ்ய புவியீர்ப்பில் பறந்த இளவயது நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றான். அவனுடைய இந்த சாதனை வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அவன், இப்படி பறந்ததாக பலரும் விமர்சன கருத்து வெளியிட்டனர்.



Tags:    

Similar News