உலகம்

அதிகரிக்கும் விபத்துகளால் நடவடிக்கை- மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதித்தது பிரான்ஸ்

Published On 2023-04-07 02:58 IST   |   Update On 2023-04-07 02:58:00 IST
  • பாரீஸ் நகர மேயர் அனீ ஹிடால்கோ வாக்கெடுப்பு நடத்தினார்.
  • சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டதில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடை செய்ய வேண்டும் என வாக்களித்தனர்.

உலக நாடுகள் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், சுற்றுலாவுக்கு பெயர்போன பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அங்கு பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக சாலையில் ஆங்காங்கே மின்சார வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். தேவைப்படுபவர்கள் அதனை ஸ்கேன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இதனை பயன்படுத்த முடியும் என்பதால் அங்கு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே இந்த மின்சார வாகனங்களை தடைசெய்ய வேண்டும் என பலர் குரல் எழுப்பி வந்தனர்.

இதனையடுத்து பாரீஸ் நகர மேயர் அனீ ஹிடால்கோ வாக்கெடுப்பு நடத்தினார். இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டதில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடை செய்ய வேண்டும் என வாக்களித்தனர்.

இதனால் அந்த நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தனிநபர்கள் தங்களது மின்சார வாகனத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News