உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணி பெண் மரணம் - குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

Published On 2024-07-22 11:16 GMT   |   Update On 2024-07-22 11:16 GMT
  • இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணியான ஓலா அட்னன் ஹர்ப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் ஆண்கள், பெண்கள் மட்டுமில்லாமல் பல குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலால் நிறைமாத கர்ப்பிணியான ஓலா அட்னன் ஹர்ப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அதே சமயம் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

உயிருடன் பிறந்த அந்த ஆண் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. ஆனால், போர்களத்திற்கு நடுவே பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தை தனது தாயை இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News