வங்கதேச நடிகர் சாந்தோ கானையும் அவரது அப்பாவையும் அடித்து கொன்ற கும்பல்
- ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மூலம் சாந்தோ கான் நாயகனாக அறிமுகமானார்.
- திரைப்பட தயாரிப்பாளரான செலிம் கான் பல படங்களை தயாரித்துள்ளார்.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வன்முறை வெடித்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.
இந்நிலையில், வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறையில் நடிகர் சாந்தோ கான் மற்றும் அவரது தந்தை செலிம் கானை கும்பல் ஒன்று அடித்து கொலை செய்துள்ளது.
திரைப்பட தயாரிப்பாளரான செலிம் கான் பல படங்களை தயாரித்துள்ளார். ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தையும் செலிம் கான் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் செலின் கான் தனது மகன் சாந்தோ கானை நாயகனாக சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தார்.
சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றச்சாட்டில் செலிம் கான் கைதாகி ஏற்கனவே சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.