உலகம்

அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க்கிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் வாக்குவாதம்

Published On 2025-03-08 13:22 IST   |   Update On 2025-03-08 13:22:00 IST
  • ரூபியோ பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டினார்.
  • எலான் மஸ்க்கின் இந்த கருத்துக்கு ரூபியோ எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

அமெரிக்காவில் அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் மற்றும் அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமெரிக்கா நாட்டில் அரசு ஊழியர்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இவ்வாறு தெரிவிக்காத ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் டிரம்ப் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, எலான் மஸ்க் இடையே கடும் வார்த்தை மோதல் எற்பட்டது. ரூபியோ பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். இதற்கு ரூபியோ எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

இதனையடுத்து, டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, "ரூபியோ-எலான் மஸ்க் மோதல் இல்லை. அவர்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News