உலகம்
டுவிட்டருக்கு புதிய சிஇஓ நியமனம் - எலான் மஸ்க்
- டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.
- அவர் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.
நியூயார்க்:
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு நேரத்திலோ அல்லது அதிகாலை சமயங்களிலோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதிய சிஇஓ நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார். நிர்வாகத் தலைவர் மற்றும் சிடிஓ ஆக எனது பங்களிப்பு மாறும் என பதிவிட்டுள்ளார்.