அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுரை
- 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வரும் நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- புதிய கட்டுப்பாடுகள் எதையும் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு கொண்டுவரவில்லை.
பாரீஸ்:
ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த நாட்டு அரசு தரவுகளின்படி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,000 நோயாளிகள் கொரோனா தொற்றுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வரும் நிலையில் அங்கு தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பது அந்த நாட்டு அரசை கவலையடைய செய்துள்ளது.
எனினும் சுற்றுலா பயணிகளிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, அரசு எதிர்ப்பு போராட்டங்களையும் தூண்டும் என்பதால் புதிய கட்டுப்பாடுகள் எதையும் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு கொண்டுவரவில்லை. அதேவேளையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக கவசங்களை பயன்படுத்தும்படி மக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.