உலகம்

பூங்காவில் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்களை நேரில் சந்தித்த பிரான்ஸ் அதிபர்

Published On 2023-06-10 03:59 IST   |   Update On 2023-06-10 03:59:00 IST
  • கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்தார் பிரான்ஸ் அதிபர்.

பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தான்.

திடீரென அவன் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கினான். இதில் கத்திக்குத்து விழுந்த குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் அலறி துடித்தனர்.

இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள், 2 பெரியவர்கள் அடங்குவார்கள். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை பிரானஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் உடல் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

Tags:    

Similar News