உலகம்

மனைவியை கொன்ற குற்றச்சாட்டில் ஹாலிவுட் ஏஜெண்ட் மகன்

Published On 2023-11-15 11:05 GMT   |   Update On 2023-11-15 11:05 GMT
  • ஹாஸ்கெல் வீடு முழுவதும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்
  • கண்டெடுக்கப்பட்டது ஹாஸ்கெல் மனைவியின் உடலா என நிபுணர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர்

அமெரிக்காவின் புகழ் பெற்ற திரைப்பட நகரம், ஹாலிவுட்.

நூற்றுக்கணக்கான முன்னணி அமெரிக்க ஆங்கில திரைப்படங்கள் இங்கு உருவாக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நடிப்பு துறையில் ஈடுபட விரும்புபவர்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்த அங்கு பல ஏஜெண்ட்கள் செயல்படுவதுண்டு.

ஹாலிவுட்டின் முன்னணி ஏஜெண்ட்களில் ஒருவர் சாம் ஹாஸ்கெல்.

இவரது மகன் சாமுவெல் ஹாஸ்கெல் ஜூனியர். இவரது மனைவி காணாமல் போயிருந்தார். அவரது உடல் பாகம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் என்சினோ பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்த கண்காணிப்பு கேமிரா வீடியோ காட்சிகள் மூலமாக ஹாஸ்கெல் வீட்டுடன் குற்றம் செய்தவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஹாஸ்கெல்லின் வீடு முழுவதும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். வீட்டில் அவரது மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர் எங்கும் காணப்படவில்லை. ஆனால், பல இடங்களில் ரத்த கறை இருந்தது.

தடயவியல் நிபுணர்கள் கொலை செய்யப்பட்டது ஹாஸ்கெல்லின் மனைவியாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். ஹாஸ்கெல் ஜூனியர் மனைவியை கொலை செய்து அவரது உடல் பாகங்களை பல பிளாஸ்டிக் பைகளில் போட்டு 4 கூலி தொழிலாளிகளிடம் கொடுத்து குப்பை தொட்டியில் போட செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதை தொடர்ந்து ஹாஸ்கெல் ஜூனியர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். காணாமல் போன அவரது மனைவியின் பெற்றோர் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Tags:    

Similar News