உலகம்
null

கென்யா போறவங்க கவனமா இருங்க.. இந்தியா அறிவுறுத்தல்

Published On 2024-06-26 05:10 GMT   |   Update On 2024-06-26 07:13 GMT
  • கென்ய நாடாளுமன்ற போராட்டத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்தனர்.
  • நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள்.

கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

கென்ய நாடாளுமன்ற போராட்டத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கென்யாவில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க கென்யாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய துணைத் தூதரகம் கூறியதாவது:-

தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கென்யாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும். நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள், என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News