உலகம்

இஸ்ரேல் - ஈரான் போர் சூழல்.. கிளம்பிவரும் அமெரிக்க படை! கவனிக்கும் ரஷியா - இந்தியா இதை செய்தால் போதும்

Published On 2024-10-02 03:08 GMT   |   Update On 2024-10-02 03:17 GMT
  • இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதில் என்று ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார்.
  • பிரதமர் மோடி, இது போருக்கான சகாப்தம் இல்லை என்று சொன்னதை நாங்களும் நம்புகிறோம்

இஸ்ரேலின் போர்கள் 

பால்ஸ்தீனத்தில் இஸ்ரேல் கடந்த 11 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பாலஸ்தீன விவகாரம் மத்திய கிழக்கு நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அமரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் எச்சரிக்கையால் அமைதி காத்து வந்தது. ஆனால் தற்போது அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1500 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் உயிரிழந்துள்ளனர்.

பொறுமையிழந்த ஈரான் 

காசாவைப் போன்ற சூழல் லெபனானிலும் உருவாகி வரும் நிலையில் ஈரான் பொறுமையை இழந்து இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம், லெபனானில் போர் சூழல் இந்த தாக்குதலுக்கு உடனடி காரணம் என்றாலும் பாலஸ்தீன போர் தொடங்கியதில் இருந்தே ஈரான் இஸ்ரேலை தாக்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது.

மேலும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஈரான் மக்களை அதன் அரசிடம் இருந்து தாங்கள் காப்பாற்றுவோம் என்று வீடியோ மூலம் பேசியதும் இந்த உடனடி நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் முதல் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உட்பட பல்வேறு இடங்களில் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் ஈரான் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

சியோனிச அடாவடித்தனம் 

இந்த தாக்குதல் இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதில் என்று ஈரான் ஆளும் சீர்திருத்தக் கட்சி அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார். ஈரானின் பாதுகாப்புக்காகவும், அமைதியை நிலைநாட்டவும் சியோனிச வல்லாதிக்கத்தை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதிலாக ஈரானின் தாக்குதலை அதிபர் பெசஸ்கியார் வர்ணித்துள்ளார்.

 

அமெரிக்கா- ரஷியா 

இதற்கிடையே இஸ்ரேலின் பாதுகாக்க அமெரிக்க ராணுவத்தை அந்நாட்டின் அதிபர் முடுக்கி விட்டுள்ளார். இஸ்ரேலின் லெபனான் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வந்த ரஷியா, தற்போது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசின் தோல்வியே காரணம் என்று தெரிவித்துள்ளது.

புது டெல்லி 

ஈரான் தாக்குதல் குறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி டெல்லியில் வைத்து பேசியுள்ளார். அவர் கூறியாவது, எங்கள் நாடு மீண்டும் இஸ்ரேலைத் தாக்கும். தற்போதைய தாக்குதல் பழிக்குப்பழி நடவடிக்கை ஆகும். மத்திய கிழக்கில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலின் தெற்காசிய விரோத செயல்களைப் பார்த்து வருகிறது. காசாவிலும் தெற்கு லெபனானிலும் ரத்தம் சிந்தப்படுத்தவை உலகம் பார்த்து வருகிறது. மக்கள் கோபத்தில் உள்ளனர். மனித உரிமை ஒப்பந்தங்களையும் சர்வதேச சட்டங்களையும் இஸ்ரேல் மீறிவிட்டது. அந்நாட்டின் பிரதமர் நேதன்யாகு 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்.

 

ஒரு உதவி 

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் செயல்களுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இஸ்ரேலுடன் இந்தியா நல்ல உறவைப் பேணுகிறது. பிரதமர் மோடியும் இது போருக்கான சகாப்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

ஈரான் அதைத்தான் நம்புகிறது. ஆனால் நாட்டின் இறைத்தன்மையை ம மற்றொருநாடு மீறும்போது என்ன செய்ய முடியும். எனவே இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டுக்கும் நெருக்கமாக உள்ள இந்தியா, இஸ்ரேலுடன் பேசி அவர்களின் இந்த மிருகத்தனத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஈரான் தங்கள் மீது தங்குதல் நடத்தி மிகப்பெரிய தவறு செய்துவிட்ட்டது, அதற்கான விலையை ஈரான் செலுத்தும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News