உலகம்

நீதியை நிலைநாட்டியுள்ளது இஸ்ரேல்.. ஹிஸ்புல்லா தலைவர் கொலைக்கு ஜோ பைடன் பாராட்டு

Published On 2024-09-29 05:32 GMT   |   Update On 2024-09-29 05:44 GMT
  • பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவாக இருக்கும்
  • வன்முறை தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா நேற்று முந்தினம் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்நிலையில் நஸ்ரல்லாவின் மரணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நஸ்ரல்லாவின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை இது. பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்காக அமெரிக்கர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் லெபனான் பொதுமக்கள் உட்பட அனைவரும் தற்போது நஸ்ரெல்லாவின் மரணத்தால் நீதி வழங்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா, ஹமாஸ்,ஹவுதி மற்றும் ஈரானிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே லெபனானில் நடந்து வரும் வன்முறை தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே இஸ்ரேல் மற்றொரு அரசியல் படுகொலையை நிகழ்த்தியுள்ளதாக ரஷியா விமர்சித்துள்ளது.

Tags:    

Similar News