ஏ.ஐ.க்கு புது விளக்கம்: இந்திய வம்சாவளியினரிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
- பாரதி நமக்குக் கற்றுத் தந்ததை மறக்கவே முடியாது.
- எங்கு சென்றாலும் அனைவரையும் குடும்பமாக ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.
வாஷிங்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நியூயார்க் சென்றார். அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
உலகைப் பொறுத்தவரை ஏ.ஐ. என்பது செயற்கை நுண்ணறிவைக் குறிக்கிறது.
ஆனால் என்னைப் பொறுத்தவரை ஏஐ என்பது அமெரிக்கா-இந்தியாவை குறிக்கிறது.
இது உலகின் புதிய ஏஐ சக்தி. இங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு எனது வணக்கம்.
நீங்கள் இந்தியாவை அமெரிக்காவையும், அமெரிக்காவை இந்தியாவையும் இணைத்துள்ளீர்கள்.
உங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு போட்டி இல்லை. நீங்கள் ஏழு கடல்களுக்கு அப்பால் வந்திருக்கலாம்.
ஆனால் எந்தக் கடலும் உங்களை இந்தியாவிலிருந்து தூரமாக்கும் அளவுக்கு ஆழம் கொண்டிருக்கவில்லை.
பாரதி நமக்குக் கற்றுத் தந்ததை மறக்கவே முடியாது. எங்கு சென்றாலும் அனைவரையும் குடும்பமாக ஏற்றுக்கொள்கிறோம்.
பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வது, பன்முகத்தன்மையை வாழ்வது என்பது நம் நரம்புகளில் உள்ளது என தெரிவித்தார்.