2 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க திட்டம்?
- பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
- வாஷிங்டன் டி.சி.க்கு செல்வார் என்று கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்திக்கும் பிரதமர் மோடி வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக பிரதமர் மோடி வருகிற 12-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாள் பயணமாக பாரிஸ் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து வாஷிங்டன் டி.சி.க்கு செல்வார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் பிரதமர் மோடி பிப்ரவரி 12-ம் தேதி மாலை அமெரிக்க தலைநகரில் தரையிறங்குவார் என்றும் மறுநாள் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இது.
எனினும், மோடியின் அமெரிக்க பயணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. கடந்த வாரம், வெளியுறவு அமைச்சகம் (MEA) பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்காக வாஷிங்டனுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறியது.