வழிபாடு
null

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2022-09-29 11:32 IST   |   Update On 2022-09-29 12:14:00 IST
  • திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
  • 9-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளையில் குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 99-வது ஆண்டு பங்கு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு திருப்பலி, 7.30 மணிக்கு கல்லறைத் தோட்டம் அர்ச்சிப்பு, மாலை 5 மணிக்கு கொடிபவனி, 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.

நாளை மறுநாள் காலை 6:30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி போன்றவை நடைபெறும். 2-ந் தேதி காலை 7 மணிக்கு நாஞ்சில் பால் பதனிடும் நிலைய மேலாண்மை இயக்குனர் அருட்பணியாளர் ஜெரால்டு ஜெஸ்டின் தலைமையில் மறைக்கல்வி மன்ற சிறப்புத் திருப்பலி நடக்கிறது.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது. 8-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி, இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறும்.

விழாவின் இறுதி நாளான 9-ந் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி, 10 மணிக்கு மலையாளத் திருப்பலி, 11.30 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வெ. சகாயஜஸ்டஸ், இணைப் பங்குதந்தை ரா.சத்தியநாதன், பங்கு இறைமக்கள், அருட்பணிப் பேரவையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News