உலகம்
null
ஸ்காட்லாந்து குருத்வாராவில் இந்திய தூதர் தடுத்து நிறுத்தம்
- சீக்கிய வாலிபர்கள் சிலர் விக்ரம் துரைசாமியை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
- விக்ரம் துரைசாமி அங்கிருந்து திரும்பி சென்றார்.
இங்கிலாந்து நாட்டுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் முன்தினம் கிளாஸ்கோ நகரில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார். ஆனால் அங்கு திரண்டிருந்த சீக்கிய வாலிபர்கள் சிலர் விக்ரம் துரைசாமியை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
அந்த வாலிபர்கள் விக்ரம் துரைசாமியின் காரை சூழ்ந்துகொண்டு, திரும்பி செல்லும்படி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து விக்ரம் துரைசாமி அங்கிருந்து திரும்பி சென்றார்.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம், இது தொடர்பாக ஸ்காட்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளது.