உலகம்

இந்தோனேசியாவில் தடையை மீறிய ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆண்டுகள் தடை

Published On 2025-03-11 01:05 IST   |   Update On 2025-03-11 01:05:00 IST
  • மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது.
  • 3 பேருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்காரா மாகாணத்தில் லோம்போக் தீவு அமைந்துள்ளது. அங்குள்ள ரிஞ்சானி தேசிய பூங்கா பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. அங்குள்ள ரிஞ்சானி மலை சாகச வீரர்களுக்கு உகந்த இடமாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அங்கு சுற்றுலா சென்றிருந்தனர். சாகச வீரர்களான அவர்கள் தடையை மீறி ரிஞ்சானி மலை மீது ஏறினர்.

இது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 3 பேருக்கும் சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரிஞ்சானி தேசிய பூங்காவுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News