உலகம்
பரஸ்பர வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்திய டிரம்ப்
- அமெரிக்காவிடம் எந்த நாடுகள் எவ்வளவு வசூலிக்கிறதோ அவற்றை நாம் வசூலிப்போம்.
- மற்ற நாடுகளை விட இந்தியா அதிக வரி விதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பரஸ்பர வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
வர்த்தகத்தில், நியாயமான நோக்கத்திற்காக நான் பரஸ்பர கட்டணங்களை வசூலிப்பேன் என்று முடிவு செய்தேன்.
அமெரிக்காவிடம் எந்த நாடுகள் எவ்வளவு வசூலிக்கிறதோ, அவற்றை நாங்கள் வசூலிப்போம். அதிகமும் இல்லை, குறைவாகவும் இல்லை.
அவர்கள் எங்களிடம் வரி மற்றும் கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இது மிகவும் எளிமையானது, நாங்கள் அவர்களிடம் சரியான வரி மற்றும் கட்டணங்களை வசூலிப்போம். மற்ற நாடுகளை விட இந்தியா அதிக வரி விதித்துள்ளது.
இது பல வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டிய விஷயம். இதுவரை யாரும் கண்டிராத அளவில் சீனா அதைச் செய்தது என தெரிவித்துள்ளார்.