அதிபர் தேர்தலில் தோற்ற பிறகு 7 முறை புதினுக்கு போன் செய்த டிரம்ப் - வெளியான உண்மை..!
- அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப், தேர்தலில் தோல்வியை தழுவினார்.
- அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் 2021 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக பதவியில் இருந்தார். இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப், தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறப் போவதில்லை என்று டிரம்ப் கூறினார். மேலும் ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க அதிபர் மாளிகையில், டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபராக தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது முதல் பல முறை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்று அமெரிக்க செய்தியாளர் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்து இருக்கிறார்.
புத்தகத்தில் உள்ள தகவல்களின் படி டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினை கிட்டத்தட்ட ஏழு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஒரு சமயம் தான் பேசுவதை உதவியாளர்கள் கேட்க கூடாது என்ற காரணத்தால் அவர்களை வெளியேற்றிவிட்டு டிரம்ப் ரஷிய அதிபர் புதினுடன் பேசினார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அமெரிக்க செய்தியாளரின் புத்தக்கில் இடம்பெற்றுள்ள தகவல்கள் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து, அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் அதிபர் வேட்பாளரான டொனல்டு டிரம்ப் புத்தகத்தில் உள்ள தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று ரஷியா தரப்பில் இருந்தும் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினிடம் தொலைபேசியில் பேசவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.