உலகம்

என்னுடைய சிறந்த நண்பர், மிகச்சிறந்த தலைவர்: பிரதமர் மோடியை புகழ்ந்த அதிபர் டிரம்ப்

Published On 2025-02-14 04:52 IST   |   Update On 2025-02-14 04:52:00 IST
  • பிரதமர் மோடியை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
  • மோடி மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.

வாஷிங்டன்:

பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி அதிபர் டிரம்பை இன்று சந்தித்துப் பேசினார்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில், இந்தச் சந்திப்பின் போது அதிபர் டிரம்ப் பேசியதாவது:

இந்தியாவுக்காக மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய இருக்கிறது. அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அவர்கள் (இந்தியா) கொள்முதல் செய்ய இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர். மிகச்சிறப்பாக செயல்படுகிறார். இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும்.

பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வர்த்தகம் தொடர்பாக நாங்கள் பேச இருக்கிறோம். பல விஷயங்கள் பற்றி பேச இருக்கிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News